Wednesday, March 20, 2013

வீ.கே.புதூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூரில் அரசு ஐடிஐ மாணவர்கள் இலங்கை அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தமிழினத்தை படுகொலை செய்யும் இலங்கை அரசைக் கண்டித்தும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கவும் வற்புறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வீரகேரளம்புதூர் அரசு ஐடிஐ மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இலங்கை அரசு, அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தாசில்தார் குருச்சந்திரன், ஐடிஐ அலுவலர் மாடசாமி மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களின் உணர்வுகளை அரசுக்கு தெரிவிப்பதாகத் தெரிவித்தனர்.

கோஷங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்ட மாணவர்கள் போஸ்ட் ஆபீஸ் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். 
நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment