Wednesday, March 20, 2013

இலங்கை அரசை கண்டித்து வீ.கே.புதூரில் திமுக பொதுக் கூட்டம்

வீரகேரளம்புதூர்:இலங்கை அரசுக்கு எதிராக ஐநாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மாற்றங்களுடன் மத்திய அரசு ஆதரிக்க கோரி வீரகேரளம்புதூரில் திமுக பொதுக்கூட்டம் நடந்தது.

ஒன்றிய பிரதிநிதி சங்கரன் கொத்தனார் தலைமை வகித்தார். கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சிவபத்மநாதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலிங்கப்பட்டி சுப்பிரமணியன், சுரண்டை நகர செயலாளர் முத்துக்குமார், வெற்றிலை சுப்பையா, முருகன், கோமதி சங்கர், அண்ணாமலை, மணி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மாரியப்பன் வரவேற்றார்.

தமிழினத்தை அழிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை திமுக தலைவர் கருணாநிதி கோரும் மாற்றங்களுடன் ஆதரிக்க மத்திய அரசை வலியுறுத்தி தூத்துக்குடி சரத்பாலா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பரசுராமன் உட்பட பலர் சிறப்புரையாற்றினர்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பழகன் மீனவரணி துணை அமைப்பாளர் பாஸ்கல், கலை இலக்கியப் பேரவை செயலாளர் ஜெயபாலன், கிளைக் கழக செயலாளர்கள் அதிசயபுரம் சைமன் அமிர்தம், தெய்வராஜ், ராஜகோபாலப்பேரி சாமி, ஜோதிராஜ், ராஜபாண்டி ராமையா பாண்டியன், செம்புலிப்பட்டணம் தங்கதுரை, கலிங்கப்பட்டி சுப்பையா பாண்டியன், கழுநீர்குளம் இஸ்மாயில், அத்தியூத்து இஸ்மாயில், தாயார் தோப்பு டாண் ஆசிர், கல்லூத்து முருகன், ஜோதிராஜ், முகமது மல்கான், ராமர் உட்பட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பரமசிவம் நன்றி கூறினார்.
நன்றி: தினமலர் 

வீ.கே.புதூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூரில் அரசு ஐடிஐ மாணவர்கள் இலங்கை அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தமிழினத்தை படுகொலை செய்யும் இலங்கை அரசைக் கண்டித்தும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கவும் வற்புறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வீரகேரளம்புதூர் அரசு ஐடிஐ மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இலங்கை அரசு, அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தாசில்தார் குருச்சந்திரன், ஐடிஐ அலுவலர் மாடசாமி மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களின் உணர்வுகளை அரசுக்கு தெரிவிப்பதாகத் தெரிவித்தனர்.

கோஷங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்ட மாணவர்கள் போஸ்ட் ஆபீஸ் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். 
நன்றி : தினமலர்