Thursday, January 24, 2013

இலவச கண் சிகிச்சை முகாம்

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா அச்சங்குட்டம் பஞ்சாயத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், ஆலங்குளம் மற்றும் வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இலவச கண் சிகிச்சை முகாம் அச்சங்குட்டம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது. முகாமினை பஞ். தலைவர் வெள்ளத்துரை துவக்கி வைத்தார். டாக்டர் சரவணன் தலைமையிலான மருத்துவர்கள் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். கண்புரை நோய் உள்ளவர்கள் இலவச மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
முகாமில் சுகாதார ஆய்வாளர் காந்திநாத், உதவியாளர்கள் விமலாமணி, ராஜம்மாள், பஞ். துணைத்தலைவர் ஜெயலட்சுமி, உறுப்பினர்கள் பவானி, குத்தாலிங்கம், சுதன், சேர்மக்கனி, திருமலையாண்டி, ராஜன், கருப்பசாமி மற்றும் ஊராட்சி செயலர் வைத்திலிங்கம் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நன்றி  :தினமலர் 

வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தின் சார்பில் வாக்காளர் தின விழா

வீரகேரம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தின் சார்பில் வாக்காளர் தின விழா, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் துவக்கப்பட்ட ஜனவரி 25, 1950ஐ நினைவு கூறும் விதமாக தேசிய வாக்காளர் தினம் கடந்த 2011ம் ஆண்டு முதல் ஜனவரி 25ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. வாக்காளரின் கடமையையும், உரிமையையும் குறித்த விழிப்புணர்ச்சியை பள்ளி, மாணவ, மாணவிகள் முதல் ஏற்படுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது.

வீரகேரளம்புதூர் தாலுகா சார்பில் வாக்காளர் தினவிழா, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவிற்கு தாசில்தார் குருச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் குமார்பாண்டியன், சிறப்பு திட்ட அமலாக்க துணைத் தாசில்தார் ராஜூ முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஜான் வரவேற்றார். வாக்காளரின் உரிமைகள் மற்றும் கடமைகள் என்ற தலைப்பில் மாணவர்களிடையே பேச்சுபுபோட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாசில்தார் பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து மாணவர்கள் பங்கு கொண்ட வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி நடந்தது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் அடங்கிய பேனர்களையும், அட்டைகளையும் ஏந்தி, விழிப்புணர்வுக் கோஷங்கள் இட்ட வண்ணம் மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர். பள்ளியில் தொடங்கிய பேரணி முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்து தாலுகா அலுவலகத்தை அடைந்தது. தாசில்தார், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.

நன்றி : தினமலர்