வீரகேரளம்புதூர்:வீ.கே.புதூர் தாலுகாவில் தென்காசி எம்.எல்.ஏ.,மூலம் வழங்கவிருக்கும் இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.வீ.கே.புதூர் தாலுகாவில் உள்ள முத்தம்மாள்புரம், நவநீதகிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களில் இம்மாதம் 30ம் தேதி தென்காசி எம்.எல்.ஏ., சரத்குமார் இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி ஆகியவற்றை வழங்குகிறார். வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் மேலோட்ட ஆய்வினை மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் செல்வராஜ், இலவச பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவற்றின் தரத்தை சோதிக்கவும், பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய விதம் குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 20 பேருக்கு முதியோர் பென்சன் பெறுவதற்கான உத்தரவை அவர் வழங்கினார்.ஆய்வின் போது தாசில்தார் சுமங்கலி, துணை தாசில்தார்கள் சிவசுப்பிரமணியன், சுதந்திரம், தாமோதரன், ஹென்றி பீட்டர், வட்ட வழங்கல் அலுவலர் சேதுராமலிங்கம், தாலுகா தலைமை அளவர் அப்துல் ஜப்பார், கலெக்டர் அலுவலக "பி' பிரிவு தலைமை அலுவலர் சுகுமார் மற்றும் அலுவலக ஊழியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
நன்றி:தினமலர்
No comments:
Post a Comment