வீரகேரளம்புதூர் வட்டத்தில் உள்ள மானாவாரிக் குளங்கள் போதிய மழை இல்லாததால் நிரம்பவில்லை. இதனால் இந்தக் குளங்களை நம்பியுள்ள பாசனப் பகுதிகளில் நெல்சாகுபடி பணிகள் இன்னும் தொடங்கவில்லை.
வீரகேரளம்புதூர் வட்டத்தில் உள்ள பங்களாச்சுரண்டை, பரங்குன்றாபுரம், வாடியூர், குலையேனேரி, ஆனைகுளம், கரையாளனூர், குரிச்சான்பட்டி, கீழக்கலங்கல், கருவந்தா, அச்சங்குன்றம் ஆகிய மானாவாரிக் குளங்கள் போதிய மழை பெய்யாததால் தண்ணீரின்றி காணப்படுகின்றன.இதனால் இந்தக் குளங்களை நம்பியுள்ள பாசனப் பகுதிகளில், இதுவரை நெல் நடவுப்பணிகள் தொடங்கவில்லை.மேலும் மழை பெய்யாத காரணத்தால், இந்தப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயரவில்லை. இதனால் வீரகேரளம்புதூர் வட்டத்தில் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன
No comments:
Post a Comment