வீரகேரளம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வட்ட தலைநகரான வீரகேரளம்புதூரில் 40 ஆண்டுகளாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. சங்கரன்கோவில் துணை சுகாதார மாவட்டத்தின்கீழ் உள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையம், தற்போது 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இங்கு பிரசவம் அதிக அளவில் நடைபெறுகிறது. ஆனால் ஒரே நேரத்தில் 2-க்கும் கூடுதலாக பிரசவம் நடைபெற்றால் தாய்-சேயைத் தங்க வைப்பதற்கு போதுமான படுக்கை வசதிகள் இல்லை. எனவே, வீரகேரளம்புதூர் அரசு ஆரம்ப சுதாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என வீரகேரளம்புதூர் ஊராட்சித் தலைவர் எஸ்.எம். மருதப்பபாண்டியன் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment