Friday, April 8, 2011

வீ.கே.புதூரில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு


வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூரில் வாசுதேவநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். வாசுதேவநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காகன பம்பிங் ஸ்டேஷன் அமைக்கும் பணி வீரகேரளம்புதூர் அருகிலுள்ள அருந்தவபிராட்டி குளப் புறம்போக்கு பகுதியில் கடந்த 3 மாத காலமாக நடந்தது. தற்போது சோதனை ஓட்டமாக தண்ணீர் விடப்படுகிறது. 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைக்கப்பட்டு இங்கிருந்து 100 ஹெச்பி திறன் கொண்ட மோட்டார் மூலம் தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறது.

இப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார். பம்பிங் ஸ்டேஷன் அமைந்துள்ள இடம், அமைக்கப்பட்ட விதம், சப்ளை செய்யப்படும் நீரின் அளவு குறித்து குடிநீர் வடிகால் வாரிய இன்ஜினியரிடம் விளக்கம் கேட்டு ஆய்வு செய்தார்.

குடுநீர் திட்டப் பணிகளுக்காக வீரகேரளம்புதூர் பகுதியில் ரோடுகள் முழுவதும் தோண்டப்பட்டு இரு சக்கர வாகனங்கள் கூட தட்டு தடுமாறி செல்லும் நிலையை நேரில் கண்ட கலெக்டர் அதிகாரிகளிடம் இது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்காக குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறைக்கு 21 லட்ச ரூபாய் செலுத்தியிருப்பதாகவும், தண்ணீர் சோதன ஓட்டம் முடிந்ததும் ரோட்டில் கிடக்கும் மண் சமப்படுத்தி கொடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் பதிலளித்தனர்.

தொடர்ந்து அடுத்த மாத இறுதிக்குள் வீரகேரளம்புதூரில் தார்ரோடு மீண்டும் அமைத்து தரப்படும் என கலெக்டர் தெரிவித்தார். குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஆய்வின்போது தென்காசி ஆர்டிஓ சேதுராமன், வீரகேரளம்புதூர் தாசில்தார் மணிபாபு, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் குத்தாலிங்கம், உதவி நிர்வாக பொறியாளர் முத்துக்குமாரசாமி, உதவி பொறியாளர் கோவிந்தராஜ், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் சம்பத், உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment