வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகனங்களை சோதனை செய்தனர். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி ஓட்டு சேகரிப்பதை தடுக்கும் வகையில் போலீஸ் ஸ்டேஷன் வாரியாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களை கொண்ட இக்குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீ.கே.புதூர் பகுதியில் கண்காணிப்பு குழுவினர் தாசில்தார் மணிபாபு தலைமையில் வாகனங்களை சோதனை செய்தனர். இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள், லாரிகள் உட்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனையிட்டனர். தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. வாகன சோதனையில் வீ.கே.புதூர் தேர்தல் பிரிவு தாசில்தார் பால்துரை, மண்டல துணை தாசில்தார் சுதந்திரம், கண்காணிப்பு குழு உறுப்பினர், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்டெக்டர்கள் ராதா, முருகையா பாண்டியன், சீனியம்மாள், சண்முகராஜன், மரிய தங்கராஜ் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment