வீரகேரளம்புதூர் ஊற்றுமலை ஜமீன். 1218 இல் வீரகேரளன் என்ற மலையாளதேச மன்னனால் உருவாக்கப்பட்டது இவ்வூர். தென்காசிக்கு அடுத்து இந்தப் பிரதேசத்தில் பெரிய ஊராக இருந்தது இதுதான்.
Friday, January 14, 2011
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும்
வீரகேரளம்புதூர்: வீரகேரளம்புதூர் தாலுகாவில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரசின் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என வட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார். பொங்கல் பண்டிகையன்று பொங்கல் வைக்க அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், 100 கிராம் பாசிப்பருப்பு, 10 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தலா 5 கிராம் ஆகியவை அடங்கிய பொருட்கள் தமிழக அரசின் மூலம் இலவசமாக ஜனவரி 1ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. இவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் பாக்கெட் செய்யப்பட்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பபட்டுள்ளது. வீரகேரளம்புதூர் தாலுகாவில் அரசு ஆணையின்படி எப்பொருளும் வேண்டாத "என்' ரேசன் கார்டுகள் உட்பட நடப்பில் உள்ள 34 ஆயிரத்து 303 ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் இலவச பொருட்கள் வழங்கப்படும். டிசம்பர் மாதம் இறுதி வரையிலும் வழங்கப்படும் புதிய ரேஷன் கார்டுகளுக்கும் இவை வழங்கப்படும். இவ்வாறு மாநில உணவு பொருள் வழங்குதுறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் பாலச்சந்திரன் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாக வீரகேரளம்புதூர் வட்ட வழங்கல் அலுவலர் சேதுராமலிங்கம் தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment